அம்மா சித்தியால் முடியாததை….. சாதித்து காட்டிய நடிகை மீனா…. அப்படி என்ன செய்தாங்க தெரியுமா?…. வியக்க வைக்கும் சுவாரஸ்ய தகவல்….!!!

தமிழ் சினிமாவில் 90களில் பலரில் உள்ளங்களையும் கவர்ந்து தனது நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அவரின் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைந்தாலும் சமீப காலமாக அவர் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன்படி அவர் இறுதியாக ரஜினி நடிப்பில் வெளியாகி இருந்த அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது அவர் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவர் வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். பத்து வருடங்களுக்கு மேல் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு மகள் ஒருவர் உள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் எட்டாம் தேதி மீனாவின் கணவர் வித்யாசாகர் நுரையீரலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திடீரென உயிரிழந்தார். அவரின் மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நடிகை மீனாவின் அம்மா மற்றும் சித்தி பற்றி பலருக்கும் தெரியாத தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. மீனாவின் அம்மா ராஜ் மல்லிகா கேரள மாநிலம் கட்டுரை சேர்ந்தவர். இருந்தாலும் அவர் தனது சிறுவயதிலேயே சென்னைக்கு வந்து விட்டார். இவரின் தங்கை ராஜ் கோகிலா. அவரை பலரும் கோகிலா என்றுதான் அழைத்தனர்.

இவர் சிவாஜி,ஜெயலலிதா மற்றும் ஜெமினிகணேசன் உள்ளிட்ட பல பிரபல நடிகர்களுடன் திரைப்படங்களிலிருந்து நடித்துள்ளார். முதலில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் கர்ணனின் கங்கா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். சில திரைப்படங்களில் நடித்து வந்த இவர் மலையாளத்தின் சண்டை நடிகர் திருமணம் செய்து கொண்டு திரை உலகில் இருந்து விலகினார் ராஜ் கோகிலா.தங்கையுடன் படப்பிடிப்புக்கு சென்ற மல்லிகாவுக்கு கர்ணனின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ராஜ் மல்லிகா அதிகமான கவர்ச்சி படங்களில் நடித்துள்ளார். இருந்தாலும் நீண்ட நாட்கள் அவரால் சினிமாவில் நீடிக்க முடியவில்லை. பின்னர் ஆந்திராவை சேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டு திரையில் இருந்து விலகினார். அவருடைய மகள் தான் மீனா. தனது அம்மா மற்றும் சித்தியால் செய்ய முடியாத சாதனையை தற்போது சினிமாவில் செய்துள்ளார் மீனா. அவரைப் போலவே அவரின் மகள் நைனிகாவும் பல நடிகர்களுடன் திரைப்படங்களில் குழந்தை கதாபாத்திரங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.