பிரபல நடிகருடன் அப்படி ஒரு உறவில்…. இருக்கும் நடிகை வாணி போஜன்….. உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை வாணி போஜன். சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் செல்லமாக சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனார்.

இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது பகைவனுக்கு அருள்வாய், பாயும் புலி நீ எனக்கு, ஊர் குருவி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார்.இதனைத் தவிர பல பட வாய்ப்புகளும் இவருக்கு குவிந்த வண்ணம் உள்ளன.

இருந்தாலும் சமீபகாலமாக வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியுள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதற்குக் காரணம் இவர் பிரபல நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதரில் இருப்பது தான். இது தொடர்பான அதிர்ச்சி தரும் தகவலை பிரபல நடிகர் பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர்,வெப் தொடர் ஒன்றில் நடித்த போது வாணி போஜனும் நடிகர் ஜெய்யும் நெருக்கமானார்கள். அதனால் வாணி போஜனுக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது.

இருந்தாலும் அவரிடம் தினமும் கதை சொல்ல வருகின்றன. ஆனால் வாணி போஜன் கதை கேட்கும்போது கூடவே ஜெய் இருக்கிறார். அவர் சமாதித்தால்தான் வாணி போஜன் கதையை ஒப்புக்கொள்கிறார். சமீபகாலமாக இவர்கள் இருவரும் லிவிங் டு கெதரில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் வாணி போஜன் கூட உஷாரா ஆகிவிட்டேன் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். இருந்தாலும் அதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை என பயில்வான் கூறியுள்ளார்.