தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பூர்ணா. கேரளாவை சேர்ந்த இவரின் நிஜ பெயர் ஷாம்னா காசிம். பின்னர் சினிமாவிற்காக பூர்ணா என்று மாற்றிக் கொண்டார். இவர் முதல் முதலாக நடிகர் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார்.

அதை தொடர்ந்து கொடைக்கானல் மற்றும் ஆடு புள்ளி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான தலைவி, திரிஷ்யம், அகண்டா உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இறுதியாக தமிழில் தலைவி மற்றும் விசிதிரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷிஃப் அலியை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார். சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது போன்ற போட்டோக்கள் இணையத்தில் வைரலாகியது. இதனிடையே இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் அதனால் அவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் இணையத்தில் தீயாய் தகவல் பரவியது.

இந்நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது வருங்கால கணவருடன் நெருக்கமாக இணைந்து போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார் பூர்ணா. அதில் என்றும் என்னுடன் என்ற கேப்டன் மற்றும் ஹார்ட் எமோஜிகளையும் பூர்ணா பதிவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து பூர்ணாவின் திருமண தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க