தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகை குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு. பின்னர் சமீபத்தில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்நிலையில் குஷ்புவின் குழந்தை பருவ வாழ்க்கை குறித்து அண்மையில் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மகாராஷ்டிராவில் 1970 ஆம் ஆண்டு பிறந்த குஷ்புவின் இயற்பெயர் நக்கர்த் கான். இவர் ஆரம்பத்தில் சினிமாவின் மேல் எந்தவித ஆசையும் இல்லாமல் இருந்துள்ளார். இவரின் வீட்டில் டிவி கூட கிடையாதாம். இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ள நிலையில் மூத்த சகோதரனின் நண்பர் ஒருவர் குஷ்புவிடம் நடிப்பதற்கு வரியா என்று கேட்டுள்ளார்.

அதற்கு சிறுவயதில் குஷ்பூ வெகுளியாக ஐஸ் கிரீம் வாங்கி கொடுத்தா வரேன் என்று கூறியுள்ளார். அப்படித்தான் இவர் 1980 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக திரைப்பட வாழ்க்கை தொடங்கினார். அவர் சினிமாவில் நடிக்கும் பணத்தை எல்லாம் சினிமாக்காரர்கள் குஷ்புவின் தந்தையிடம் அப்படியே கொடுத்துவிடுவர்.

அந்த பணத்தில் சிறிது பணத்தை கூட குஷ்புவிற்கு தராமல் அவரது தந்தை அனைத்தையுமே செலவு செய்து விடுவாராம். இது குறித்து சினிமாத்துறையினருக்கு தெரிய வர குஷ்புவிடம் பணத்தை கொடுத்தனர். ஆனால் அப்போதும் அவரின் தந்தை பணம் கேட்டு தொல்லை செய்வார். ஒருவேளை அப்படி பணம் தர மறுத்து விட்டால் கார் கண்ணாடியை உடைப்பது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவாராம்.

தினம்தோறும் தந்தை இவ்வாறு செய்வதால் அவரின் செயலை பொறுத்துக் கொள்ள முடியாமல் மனம் உடைந்த குஷ்பூ தந்தையை விட்டு விலகினார். அப்போதிலிருந்து இப்போது வரை குஷ்பூ தனது தந்தையை சந்திக்கவில்லை என்றும் அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பது கூட அவருக்கு தெரியாது என்றும் கூறப்படுகிறது.

அது மட்டும் அல்லாமல் தனது திருமணத்திற்கு கூட குஷ்பூ தனது தந்தையை அழைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இவ்வாறாக தந்தையை விட்டு விலகிய குஷ்பூ அப்போதிலிருந்து சினிமா துறையில் முழுவதுமாக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து களம் இறங்கினார்.