மைனா படத்தில் முட்டை கண்களால் மிரட்டிய நடிகை சூசன் ஜார்ஜ்…. இவருக்கு இவ்வளவு பெரிய மகனா?…. வைரலாகும் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை சூசன் சார்ஜ். இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மைனா திரைப்படத்தில் ஜெயிலரின் மனைவி சுதா கதாபாத்திரத்தில் நடித்து அசத்து இருப்பார்.அந்த திரைப்படத்தின் மூலம் இவரை நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மலைவாழ் மக்களின் கதைக்களத்தை கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

2010 ஆம் ஆண்டு தீபாவளி வெளியீடாக வெளியான இருந்த இந்த திரைப்படம் 2013 ஆம் ஆண்டுபெங்காலி பங்களாதேஷ் சைமன் சாதிக் மற்றும் மகிமா மகி நடித்த பொரா முன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவான மைனா திரைப்படம் கிட்டத்தட்ட 30 கோடி வசூலை குவித்தது. இந்தத் திரைப்படத்தில் ரசிகர்களை தனது முட்டை கண்களால் மிரட்டியவர் தான் சூசன் சார்ஜ்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு இவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்காமல் போனது.தொடர்ந்து பல திரைப்படங்களில் துணை வேடத்தில் மட்டுமே நடித்து வந்தார். அதாவது தேசிங்கு ராஜா, நண்பேண்டா, ராட்சசன் மற்றும் ஆனந்தம் விளையாடும் வீடு உள்ளிட்ட பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து அசத்தியுள்ளார்.

 

குறிப்பாக ஆனந்தம் விளையாடும் வீடு என்ற திரைப்படத்தில் சேரனின் மனைவியாக நடித்திருந்த இவரின் நடிப்பு பலரின் பாராட்டுக்களையும் பெற்றது. அது மட்டுமல்லாமல் சுழியம், ரோஜா கூட்டம்,பூக்கள் மற்றும் சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியல்களிலும் இவர் நடித்துள்ளார். இதனிடையே சூசன் தனது மகளுடன் இருக்கும் ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் உங்களுக்கு எப்போது திருமணம் நடந்தது இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா! என கேள்வி எழுப்பி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்