மனைவியை பக்கத்துல வச்சிக்கிட்டே அந்த வேலை பண்ண சஞ்சீவ்…. அதற்கு ஆல்யா மானசா கொடுத்த ரியாக்ஷன்…. வைரல் வீடியோ…..!!!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆலியா மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அதாவது இவர் விஜய் டிவியிலும் சஞ்சீவ்  சன் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தனர்.இதனிடையே மீண்டும் ஆல்யா மானசா கர்ப்பமானதால் சீரியலில் இருந்து சற்று விலகினார்.

சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் அடிக்கடி தங்கள் புகைப்படங்களை இணையத்தில் பகிர்வது வழக்கம். அவ்வகையில் தற்போது அவர்கள் இருவரும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் தனது மனைவியை அருகில் வைத்துக் கொண்டு பெண்களை சஞ்சீவ் சைட் அடித்துள்ளார். அதற்கு ஆலியா மானசா கொடுத்த ரியாக்ஷன் தற்போது வைரல் ஆகி வருகிறது.