முத்தையா கூட்டணியில் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படம்கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. அதில் யுவன் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் படத்தில் ஒரு பாடலையும் அவர் பாடியுள்ளார்.

சூர்யாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தின் மூலமாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,கருணாஸ் மற்றும் ராஜ்கிரன் உள்ளிட்டோர் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகின்றது.

இந்த நிலையில் அனைத்து படங்களையும் முதல் ஷோ பார்த்துவிட்டு கமாண்ட் தெரிவிக்கும் பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ், விருமன் திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்தார். அப்போது அவர் அதிதி சங்கரை காதலிப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சங்கரின் மகளை பார்க்க தான் வந்தேன். சங்கர் சார் அதிதியை நான் காதலிக்கிறேன். நீங்கள் பெரிய இடம் ஆனால் நான் ஏழை தான்.உங்கள் மகளை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் நான் கமிஷனர் அலுவலகம் செல்வேன் என்று கையில் வைத்திருந்த ஒரு பேனரை காட்டி நகைச்சுவையாக பேசினார்.

ஆனால் தற்போது என்ன நடந்தது என்று தெரியவில்லை, “அதிதி எனக்கு தங்கச்சி மாதிரி. அப்படி பேசியது தவறு தான் என்னை மன்னித்து விடுங்கள்”என்று அவர் கூறியுள்ளார். இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் ஒருவேளை அடி பலமோ? அதான் இப்படி அந்த பல்டி அடிக்கிறார் என்று கலாய்த்து பேசி வருகிறார்கள்.