திருமணம் முடிந்த கையோடு….. மார்டன் உடையில் மஞ்ச தாலியுடன்…. ஹனிமூன் புறப்பட்ட சீரியல் நடிகை மஹாலட்சுமி….!!!!

சீரியல் நடிகை மகாலட்சுமி முதல் கணவரை பிரிந்து ஏன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மகாலட்சுமி அணில் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை விட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார் மகாலட்சுமி.

இதனைத் தொடர்ந்து மகாலட்சுமி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அவரின் கணவர் அனைத்து பிரச்சனையும்விரைவில் தீர்ந்துவிடும் என நினைத்து அவருடன் வாழ தயாராக இருந்தும் கணவரை விட்டு பிரிவதில் மகாலட்சுமி உறுதியாக இருந்தார். இதனால் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று இரண்டு வருடங்கள் ஆன நிலையில் மகாலட்சுமி சன் டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் நடித்து வருகின்றார்.

சீரியல் நடிகையான மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை கடந்த 2 நாட்களுக்கு முன்பு  திருப்பதியில் திடீரென திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணத்தில் குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் மற்றும் தொலைக்காட்சி துறை தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட புதுமண தம்பதிகளை வாழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து தனது திருமண புகைப்படங்களை வெளியிட்ட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன், எல்லோரும் மகாலட்சுமிபோல பெண் அமைய வேண்டும் என்று நினைப்பார்கள் ஆனால் எனக்கு மகாலட்சுமியே வாழ்க்கைத் துணையாக அமைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ளார்.

 

இந்நிலையில் மறுமணத்திற்கு பிறகு நடிகை மகாலட்சுமி ஹனிமுன் சென்றுள்ளார்.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.