அடடே…. நம்ம கீர்த்தி சுரேஷா இது?…. சிறுவயதில் பாப் கட்டிங்-இல்ல் வேற லெவலில் இருக்காங்களே….!!!!

தென்னிந்திய திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். அன்னையின் இவரது நடிப்பில் சாணி காகிதம் என்ற திரைப்படம் தமிழில் வெளியாகியது. இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கில் சர்க்காரு வாரி பாட்டா , மலையாளத்தில் வசி ஆகிய இரண்டு படங்களும் தொடர் தோல்வியை சந்தித்தது. தற்போது மாமன்னன் என்ற திரைப்படத்தை கீர்த்தி சுரேஷ் கைவசம் வைத்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.

இந்நிலையில் நடிகர் நடிகையின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அவ்வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் பாப் கட்டில் மிக அழகாக காணப்படுகிறார். இதனை ரசிகர்கள் பலரும் இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.