வனிதாவை விட்டு பிரிந்த மகள்…. இப்போ யார் கூட இருக்காங்க தெரியுமா?…. இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் கிளிக்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார். இவர் சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். அதனைத் தொடர்ந்து சில பழங்களில் நடித்து வந்த இவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பை ஓரம் கட்டினார். அதன் பிறகு சில வருடங்கள் கழித்து திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்பட்ட காரணத்தினால் இரண்டு முறை விவாகரத்து செய்தார்.

அது மட்டுமல்லாமல் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான இவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தனது இரண்டு மகள்களுடன் இன்றும் தனியாக வசித்து வருகிறார். சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தயங்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பிறகு தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து youtube சேனலை தொடங்கி அதில் சமையல் குறிப்புகளை வீடியோவாக போட்டு வந்தார். தற்போது அனல் காற்று, அந்தக் கண் மற்றும் சிவப்பு மனிதன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிகை வனிதா கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சமீபத்தில் முடிவடைந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவர் கலந்து கொண்டார். மேலும் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றையும் நடத்தி வருகிறார். இப்படி பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வரும் வனிதாவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் தான் வாழ்க்கையே மாறிவிட்டது என்று கூறலாம்.

இதனிடையே வனிதாவின் இளைய மகள் ஜெயனிதா வீடியோக்கள் அல்லது பொது இடங்களில் இதுவரை காட்டப்பட்டது கிடையாது. இது குறித்து பலரும் கேட்ட நிலையில் அதற்கு வனிதா எந்த ஒரு பதிலும் அளித்ததில்லை. மேலும் வனிதாவின் இளைய மகளை அவரது தந்தை அழைத்துச் சென்று விட்டார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் வனிதா தன்னுடைய இளைய மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. வனிதாவின் இளையமகள் ஜெனிதாவை அவரின் தந்தை அழைத்துச் சென்று விட்டார். தன்னுடைய மூத்த மகளுடன் வனிதா தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். தற்போது தனது இளைய மகளுடன் வனிதா இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியான நிலையில்அந்தப் புகைப்படத்தில் பார்ப்பதற்கு ஜெயனிதா அப்படியே வனிதாவை போலவே இருக்கிறார் என்று பலரும் கமாண்ட் செய்து வருகிறார்கள்.