சரவணா ஸ்டோர் தொழிலதிபரான அருள் சரவணன் நடித்த தி லெஜண்ட் திரைப்படம் கடந்த ஜூலை 28 ஆம் தேதி உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 2,500 திரையரங்குகளில் வெளியானது.அப்படத்தில் அருள் சரவணன் மனைவியாக கீர்த்திகா திவாரி என்பவர் நடித்திருந்தார். மேலும் அவரின் காதலியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா என்பவர் நடித்திருந்தார்.

ஜோடி ஜெர்ரி இயக்கத்திலும் தொழிலதிபர் சரவணன் நடித்துள்ள தீ லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி,மலையாள மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக உருவானது.இந்தத் திரைப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை விநியோகம் செய்த கோபுரம் சினிமாஸ் அன்பு செழியன் இந்த படத்தை அதிக முன் பணம் கொடுத்து தமிழகத்தில் வெளியிட்டது.இப்படத்திற்கு மோசமான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதனால் இப்படத்தின் வசூல் அதிகளவு பாதிக்கப்பட்டது.சுமார் 45 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததாக இணையத்தில் தகவல் வெளியானது.

இந்நிலையில் தி லெஜெண்ட் திரைப்படம் 45 கோடி வசூல் செய்துள்ளதாக பட குழுவினர் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படத்தின் ஓடிடி உரிமை 25 கோடிக்கு விலை போய் உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு சேர்த்து தான் 45 கோடி வசூல் செய்துள்ளது என்று இணையத்தில் தகவல் வெளியாகி உள்ள நிலையில் இதனை பலரும் நம்ப முடியாமல் ஆச்சரியமடைந்துள்ளனர்.