அய்யோ இவருக்கா இப்படி ஒரு நிலை?…. தெருவில் இறங்கி அந்த வேலை செய்யும் விஜய்யின் தந்தை…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும், பிரகாஷ் ராஜ், யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது.

இதனிடையே நடிகர் விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் பிரபல இயக்குனர், நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என அனைவரும் அறிந்திருப்போம். மேலும் விஜய்க்கும் அவரின் தந்தைக்கும் இடையே தற்போது சற்று பிரிவு ஏற்பட்டுள்ளது என அண்மையில் பல தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக பல இடங்களில் இருவருமே பேசிவிட்டனர்.

இந்நிலையில் எஸ்ஏ சந்திரசேகர் அவ்வப்போது தான் செய்யும் பல விஷயங்களை இணையத்தில் பதிவு செய்வார். அவ்வகையில் தற்போது அவர் தெருவில் இறங்கி ரிக்ஷா ஓட்டும் புகைப்படம் ஒன்றை வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் இணையத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.