இரண்டே மாதத்தில் எடையை குறைக்க ஆல்யா மானசா செய்த ஹார்ட் வொர்க்…. வேற லெவலில் பரிசு கொடுத்து அசத்திய சஞ்சீவ்….!!!!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.அதன் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாடு என்ற நிகழ்ச்சியில் இருவரும் போட்டியாளராக கலந்துகொண்டார் ஆலியா மானசா. அதன் பிறகு ராஜா ராணி சீரியலில் சஞ்சீவுடன் இணைந்து நடித்திருந்தார்.

இந்த சீரியலின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தனர். மேலும் சீரியலின் போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அப்போது சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட ஆலியா மீண்டும் சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

அதாவது இவர் விஜய் டிவியிலும் சஞ்சு சன் டிவியில் சீரியல்களில் நடித்து வந்தனர்.இதனிடையே மீண்டும் ஆல்யா மானசா கர்ப்பமானதால் சீரியலில் இருந்து சற்று விலகினார். சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே குழந்தை பிறந்ததற்கு பிறகு ஆலியா மானசாவின் உடல் எடை சற்று அதிகரித்துள்ளது. தற்போது புதிய சீரியலில் நடிப்பதற்காக கமிட் ஆகியிருக்கும் ஆல்யா இரண்டு மாதத்தில் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

sanjeev இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@sanjeev_karthick)

மிகவும் சிரமப்பட்டு உடல் எடையை குறைத்துள்ள ஆலியாவிற்கு அவரின் கணவர் சஞ்சீவ் ஒரு அசத்தலான பரிசு வழங்கியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது