அம்மாடியோ இத்தனை கோடியா?…. தளபதி 67 படத்தில் வில்லனாக நடிக்க விஷால் கேட்ட சம்பளம்…. கேட்டா தலையே சுத்துது…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய்.இவரின் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகிறது.வம்சி இயக்கி வரும் இந்த திரைப்படத்தில் தாஸ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ்,யோகி பாபு மற்றும் சரத்குமார் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்து வருகிறது.

திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் நடிக்க உள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தளபதி 67 திரைப்படத்தின் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஷாலின் நடிக்க வைக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார்.

இது குறித்த செய்தி சில நாட்களுக்கு முன்பே வெளியானது.விஷால் ஹீரோவாக வாங்கும் சம்பளத்தை விட இந்த திரைப்படத்திற்காக அதிக சம்பளம் வில்லனாக நடிக்க கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஷாலை 20 கோடி வரை சம்பளம் கொடுத்து இந்த திரைப்படத்திற்காக வாங்க உள்ளதாக கூறப்படுகிறது.