அப்படியே சூப்பர் ஸ்டார் ரஜினி போலவே இருக்கும் நபர்…. வாயடைத்துப் போன ரசிகர்கள்….. வைரலாகும் வீடியோ…..!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வந்து கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினி இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் இணைந்துள்ளார்.

இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன்,கே எஸ் ரவிக்குமார் போன்ற முன்னணி நடிகர்கள் நடித்து வருதாக கூறப்படுகிறது. ஹைதராபாத்தில் படத்தின் சூட்டிங் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது சென்னையிலேயே பிரம்மாண்டஸ் செட் அமைத்து சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினி நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஜினி போலவே அச்சு அசலாக இருக்கும் நபரின் பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பாகிஸ்தானை சேர்ந்த Rehmat Gashkori என்ற நபர் தான் பார்ப்பதற்கு ரஜினி போலவே உள்ளார். அவர் தாசில்தாளராக பணியாற்றி வருகிறார். அவர் வேட்டைக்குச் செல்லும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டால் ரஜினி போலவே ஸ்டைலாக செய்வதாக கமெண்ட் செய்வார்கள்.ரஜினியை நேரில் சந்தித்து போட்டோ எடுக்க வேண்டும் என அவர் ஆசை தெரிவித்துள்ள நிலையில் அவரின் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.