எனக்கு மிகவும் பிடித்த ஹீரோ, ஹீரோயின் இவங்கதான்…. மனம் திறந்த நடிகை அதிதி….!!!!

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்திக் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் விருமன். இந்தத் திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர் முதன் முறையாக ஹீரோயினியாக களமிறங்கியுள்ளார்.

இப்படத்தின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு பாடலையும் அதிதி சங்கர் பாடியுள்ளார். முதல்முறையாக ஹீரோயினியாக அறிமுகமான படத்திலேயே மிகப்பெரிய ஹிட் கொடுத்துள்ளார் அதிதி சங்கர். இதனால் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன.அவ்வகையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தனக்கு  மிகவும் பிடித்த ஹீரோ மற்றும் ஹீரோயின் யார் என நடிகை அதிதி மனம் திறந்து கூறியுள்ளார். அதன்படி சீனியர் ஹீரோக்களில் நடிகர் ரஜினிகாந்தை பிடிக்கும் என்றும் இளம் ஹீரோக்களில் சூர்யாவை மிகவும் பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தன்னை மிகவும் கவர்ந்த நடிகை சமந்தா எனவும் குறிப்பிட்டுள்ளார். விரும்பன் படத்தில் கிராம பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த அதிதி அடுத்ததாக மாவீரன் திரைப்படத்தில் மார்டன் பெண்ணாக நடிக்க உள்ளார். இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.