“வேற லெவல் ப்ரோமோ”…. அரங்கமே அதிர காதலை சொன்ன அமீர்…. கதறிய பாவனி…. எதிர்பார்ப்பில் பார்வையாளர்கள்….!!!

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் அறிமுகமானவர்கள் அமீர் மற்றும் பாவணி. இவர்கள் இருவரும் தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் விலை உயர்ந்த மோதிரத்துடன் பாவணிக்கு அமீர் தன் காதலை கூறிய பிரமோ இணையத்தில் வைரலாகி அரங்கையே அதிர வைத்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அமீர் மற்றும் பாவணி இருவரின் உறவு நெருக்கமாகிவிட்டது. இதனிடையே பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி முடித்த பிறகு ஒட்டுமொத்த அரங்கமும் அதிரக்கூடிய வகையில் அமீர் தனது காதலை வெளிப்படுத்தினார்.

அதனைக் கண்டு பாவனி கண்ணீர் விட்டு கதறி அழுதார். ஆனால் அமீரின் காதலுக்கு பாவனி என்ன பதில் கூறுவார் என்று நிகழ்ச்சியில் தான் தெரிய வரும் . அவர் கூறப்போகும் அந்த ஒரு நொடி பதிலுக்காக பார்வையாளர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றன.