“கடலின் அருகே நடந்த திருமணம்”…. திடீரென மணமக்களை பதறவிட்ட சம்பவம்…. என்ன நடந்தது தெரியுமா?…. வைரலாகும் வீடியோ…!!!!

வாழ்வின் முக்கிய தருணமான திருமணத்தை என்றும் அழியாத நினைவாக வைக்க பிடித்த இடங்களில் தங்கள் திருமணத்தை நடத்த பலரும் ஆசைப்படுகின்றனர். அப்படி வித்தியாசமான இடங்களில் திருமணம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் கடற்கரையில் திருமணம் நடத்துவது அண்மையில் மிகப் பிரபலம் ஆகி உள்ளது. அப்படி டிலான் மற்றும் ரிலே மர்பி என்ற தம்பதிக்கு ஹாவாயில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது.

Decorations for wedding ceremony on Boracay island beach

அதற்காக அமெரிக்காவிலிருந்து 2000 கிலோ மயில் தொலைவில் அமைந்துள்ள இந்த தீவுக்கு தங்களுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சென்றனர். அதன் பிறகு அங்குள்ள தனியார் விடுதியில் இவர்களின் திருமணம் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக அவர்களது திருமணத்தில் அழையா விருந்தாளியாக கடல் அலை ஆக்ரோஷமாக நுழைந்தது.

அப்போது அங்கிருந்தவர்கள் அனைவரும் பதறி அடித்துக் கொண்டு ஓடினர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, மேசைகளில் உணவு பரிமாறப்படுவதற்கு முன்னரே அலை உள்ளே நுழைந்து விட்டது, இதனால் விருந்தினர்களுக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட உணவுகளும் சேதமடையாமல் தப்பித்தது என்று தம்பதியினர் கூறியுள்ளனர். இது சம்பந்தமான வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.