அடடே இவங்களுமா?…. பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள்…. 11 பேரின் லிஸ்ட் வெளியீடு…..!!!!

விஜய் டிவியில் விரைவில் ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 6- இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அவ்வளவு விறுவிறுப்பான நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்குவதை ரசிப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது என்றால் மறுபக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமும் உள்ளது. தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் சீசன் ஆறு ஆரம்பமாக உள்ளது. இந்த சீசனையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார்.

இந்நிகழ்ச்சி வருகின்ற அக்டோபர் இரண்டாம் தேதி தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு கிட்டத்தட்ட இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தற்போது அதில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். பிக்பாஸ் சீசன் 6 இல் பொதுமக்களும் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஆடிஷன் தற்போது நடைபெற உள்ளது.இருந்தாலும் பரபரப்பை கூட்ட பல பிரபலங்களை அவர்கள் போட்டியாளர்களாக களம் இறக்கும் திட்டத்தில் இருக்கின்றனர்.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

அதன்படி பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில், ஜி பி முத்து, ரக்சன், டிடி, தர்ஷா குப்தா, டிமானின் முன்னாள் மனைவி மோனிகா, பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக், பாடகி ராஜலட்சுமி, ஸ்ரீநிதி, ஷில்பா மஞ்சுநாத், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் மற்றும் சத்யா சீரியல் புகழ் ஆயிஷா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருந்தாலும் இதில் இருக்கும் நபர்கள் உண்மையிலேயே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்களா என்பது குறித்து விரைவில் தெரியவரும் என கூறப்படுகிறது.