OMG: கார் விபத்தில் பிரபல பாடகர் திடீர் மரணம்…. சோகத்தில் மூழ்கிய திரையுலகம்….. இரங்கல்….!!!!

சமீபகாலமாகவே தென்னிந்திய திரை உலகை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் உயிரிழந்து வரும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றது.. அடுத்தடுத்து ஏற்படும் மரணங்கள் திரையுலகினர் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வகையில் பிரபல பஞ்சாபி பாடகர் நிர்வயர் சிங் விபத்தில் உயிரிழந்து உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பஞ்சாபி பாடகர் ஆன நிர்வயர் சிங், கடந்த 9 வருடங்களுக்கு மேலாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார். My turn என்ற ஆல்பத்தில் tere binaஎன்ற பாடல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் அடுத்தடுத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று மெல்போர்னில் காரில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த மற்றொரு கார் மோதியதில் இவரின் கார் விபத்துக்குள்ளானது.அந்தக் கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே இவர் பரிதாபமாக உயிரிழந்தார். எதிரே வந்த நபர் காரை தாறுமாறாக ஓட்டி வந்த நிலையில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் அந்த நபரின் கார் மொத்தம் மூன்று வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் பாடகர் நிர்வயர் சிங் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஆஸ்திரேலிய வால் இந்தியர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.