சின்னத்திரையில் நடிக்கும் பிரபலங்கள் பலரும் ரியல் லைஃபில் திருமணம் செய்து கொள்கின்றனர். அவ்வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியல் மூலம் அறிமுகமானவர்தான் ரேஷ்மா. இவர் அதே சேனலில் ஒளிபரப்பான ஒரு நடன நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். அதன் பிறகு சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அந்த சீரியலில் இவருடன் கதாநாயகனின் தம்பியாக நடித்து வந்தவர் மதன்.

இவர் ஏற்கனவே கனா காணும் காலங்கள் என்ற சீரியலில் நடித்துள்ளார். இருந்தாலும் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்ததன் மூலம் தான் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். பின்னர் சில நாட்கள் கழித்து இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் பரவியது. அதனை அவர்களும் உறுதி செய்தனர். இவர்களின் காதல் இரு விட்டாருக்கும் தெரிய வர, அவர்கள் ஒப்புக்கொண்ட நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

தற்போது ரேஷ்மா மற்றும் மத இருவரும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று உள்ளனர். இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போதுமே இவர்கள் இருவரும் ஆக்டிவாக இருப்பார்கள்.அவ்வகையில் ரேஷ்மா நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அவர், நான் தற்போது எந்த ப்ராஜெக்ட்டிலும் இல்லை. வாய்ப்புக்காக காத்திருக்கிறேன் என்று கூறிய நிலையில் நெட்டிசன் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார். அதனைப் பார்த்ததும் கடுப்பான ரேஷ்மா,எப்பா இல்லப்பா எத்தனை பேர் தான் கிளம்பி இருக்கீங்க என்று கூறி அந்த நபர் pregnant என்ற வார்த்தையை ஸ்பெல்லிங் மிஸ்டேக் செய்திருப்பதை குறிப்பிட்டு ரேஷ்மா கலாய்த்து பதிவிட்டு இருந்தார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
