இது எப்போ?…. நடிகர் சிம்புவுடன் நெருக்கமாக போஸ் கொடுத்த சமந்தா…. போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் சமந்தா. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாக சைதன் யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்த பிறகு சினிமாவில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடலுக்கு அவர் டான்ஸ் ஆடி இருந்ததற்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் தற்போது இந்தியிலும் மிகப் பிரபலமான நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் இந்திய அளவில் டாப் நடிகைகளின் பட்டியலில் சமந்தா முதலிடத்தை பிடித்து வருகின்றார். இவர் தற்போது யசோதா மற்றும் சகுந்தலா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகின்றார். இந்தியில் ஒரு வெப் சீரிஸில் நடிக்கின்றார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் சமந்தா தமிழில் முன்னணி நடிகர்கள் பலருடனும் சேர்ந்து நடித்துள்ளார்.

ஆனால் நடிகர் சிம்புவுடன் ஜோடியாக இதுவரை அவர் நடித்ததில்லை. இருந்தாலும் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் அவருடன் நடித்துள்ளார்.இதனிடையே அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு அட்டை படத்திற்காக நெருக்கமாக போட்டோ சூட் அப்போது எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.