கேப்டன் விஜயகாந்தா இது?…. எப்படி இருந்தவர் இப்படி மாறீட்டாரே…. இணையத்தில் வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவில் 90 களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவரின் ஆக்சன் திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வெற்றி தான். அந்த அளவிற்கு தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். தமிழ் ரசிகர்களால் கேப்டன் என்று அன்பாக அழைக்கப்படுபவர். நடிப்பு ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் தேமுதிக கட்சியின் தலைவராகவும் இருந்தவர் விஜயகாந்த்.

அப்படிப்பட்ட சிறந்த ஹீரோவாக விளங்கிய விஜயகாந்த் கடந்த சில வருடங்களாக உடல் நல குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்தார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனிடையே விஜய் மிருடன் இயக்கத்தில் உருவாகி வரும் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தில் விஜயகாந்த் மீண்டும் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது.

இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர், விஜயகாந்த் இந்த படத்தில் நடிப்பார் அல்லது அவருடைய குரலாவது படத்தில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் திரையுலகை சேர்ந்த முக்கிய இயக்குனர்கள் ஆர் கே செல்வமணி, விக்ரமன், பேரரசு மற்றும் ரவி மரியா ஆகியோர் விஜயகாந்தை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் இவருக்கா இப்படி ஒரு நிலை என்று பதிவிட்டு அவர் விரைவில் குணமடைய வேண்டி கமெண்ட் செய்து வருகிறார்கள்.