நீங்க போட்டிக்கு ரெடியா?…. ரூ.10 லட்சம் ரொக்க பரிசு…. இயக்குனர் அமீர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அமீர். மௌனம் பேசியதே, ரா மற்றும் பருத்திவீரன் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கி தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர். இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கலைஞராக பலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில் வெற்றிமாறன் இயக்கத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் போதைப் பொருள்களை பயன்படுத்துவதின் தீமைகள் மற்றும் ஆரோக்கியமாக வாழ்வது முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வருகின்ற செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மதுரை கே எல் என் பொறியியல் கல்லூரியில் உலக உடற் பகுதி கூட்டமைப்பு தேசிய அளவிலான உடற்கட்டமைப்பு மற்றும் உடற்பகுதி போட்டியை இயக்குனர் அமீர் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். ஆனால் தற்போது அனைவரும் பாரம்பரிய உணவு பழக்கத்தில் இருந்து விலகி விட்டோம். அதனால் தற்போது யாரும் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.ஆரோக்கியமாக இருப்பது குறித்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். நடிகர்கள் மட்டுமே ஃபிட்டாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை பரவலாக இருக்கின்றது.

ஆனால் அது எதுவும் உண்மை அல்ல. அப்போதெல்லாம் கல்லூரி தேர்வில் தேர்ச்சி பெறுவதே மாணவர்களின் இலக்காக இருந்தது.ஆனால் இப்போது என்னவோ போதை பழக்கம் இல்லாமல் கல்லூரியை விட்டு வெளியே வருவது மிகப்பெரிய சாதனையாக இருக்கின்றது. அனைவரும் நமது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். எனது பயிற்சியாளர் மோகன் ஆதரவுடன் இந்த போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளேன்.மற்ற போட்டிகளைப் போல் இல்லாமல் இந்த போட்டியில் அதிக பங்கேற்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாக 10 லட்சம் ரூபாய் வரை ரொக்க பரிசு வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.