மாமியாருக்கு சின்னதா ஒரு அன்பு முத்தம்…. விக்னேஷ் சிவன் போட்ட பதிவு…. வீட்ல என்ன விசேஷம் தெரியுமா….????

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை மற்றும் இளைஞர்களின் கனவு கனியான நடிகை நயன்தாரா மற்றும் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் மிக பிரம்மாண்டமாக திரை பிரபலங்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடித்த கையோடு தாய்லாந்து மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு ஹனிமூன் சென்று அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷி படுத்தினர். இந்நிலையில் ஹனிமூன் முடித்துவிட்டு தற்போது இந்தியா திரும்பியுள்ள விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படத்திற்கான ஆரம்ப கட்டப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே நயன்தாராவின் அம்மா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை கூறினர்.இந்நிலையில் நயன்தாராவின் அம்மாவுக்கு தனது வாழ்த்துக்களை கூறி அவரின் தலையில் அன்பு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Vignesh Shivan இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@wikkiofficial)

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அது மட்டுமல்லாமல் அவர் இது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில் மனம் உருக்கமான அன்பு வாழ்த்துக்களை தெரிவித்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்