அடி தூள்…. தல அஜித்துடன் இமயமலை பைக் ரைடில் பிரபல நடிகை…. இணையத்தில் வைரலாகும் மாஸ் புகைப்படம்….!!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் அஜித். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஹிட் கொடுத்துள்ளனர். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான வலிமை திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை. இதனைத் தொடர்ந்து எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏகே 61 படத்தில் நடிகர் அஜித் பிஸியாக உள்ளார்.

இதில் பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். படத்தின் பூஜை போடப்பட்டதை தவிர அதன் பிறகு படத்தை குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.இருந்தாலும் படத்தைப் பற்றிய தகவல்கள் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு தான் இருக்கின்றன.

இந்தத் திரைப்படம் ஒரு வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ளது. மேலும் படத்தில் அஜித் ஹீரோ மற்றும் வில்லன் என இரு கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் இதெல்லாம் உண்மையா என இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு கொண்டு வர பட குழுவினர் திட்டமிட்டுள்ளனர் .

படத்தின் சூட்டிங் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற வந்த நிலையில் அதனை முடித்த கையோடு இமயமலைக்கு பைக் ரைட் சென்றுள்ளார் அஜித். அவர் அங்கு இமயமலையை சுற்றி வரும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தற்போது அஜித்தின் இந்த பைக் ரைடில் பிரபல நடிகை மஞ்சுவாரியாரும் இணைந்துள்ளார்.அஜித்துடன் இவர் லடாக் பகுதியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. குறிப்பாக மஞ்சு வாரியார் ஏகே 61 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.