தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் ராஜ்கிரண். இவரின் மகள் தந்தையின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் தகவல்கள் நேற்று வெளியானது. அதாவது ராஜ்கிரன் மகள் ஜீனர் நாதஸ்வரம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த முனீஸ் ராஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்கிரனுக்கு இதில் விருப்பம் இல்லாத காரணத்தால் முனீஸ் ராஜா தனது குடும்பத்தினர் முன்னிலையில் ஜீனத்தை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் அவர் என் மகள் இல்லை, என்னுடைய வளர்ப்பு மகள் தான் என ராஜ்கிரன் விளக்கம் அளித்திருந்தார்.அதுமட்டுமல்லாமல் அவரை காதல் திருமணம் செய்த சீரியல் நடிகர் பணம் பறிக்கும் நோக்கத்தில் தான் இதை செய்திருக்கிறார் எனவும் அவரை எப்போதும் என் மருமகனாக நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் எனவும் ராஜ்கிரன் ஆவேசமாக பேசியிருந்தார்.

மேலும் முகநூல் மூலமாக அவருடன் நட்பு ஏற்படுத்தி கொண்ட சீரியல் நடிகர்,என்னென்ன முறையிலோ அந்தப் பெண்ணை தன் வசப்படுத்தி கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற மனநிலைக்கு கொண்டு வந்திருக்கிறார். இது குறித்த செய்தி என் காதுக்கும் வந்தது, அது குறித்து நான் விசாரிக்க தொடங்கியதில் அவர் மகா மட்ட ரகமான புத்தியும் பணத்துக்காக எதையும் செய்யும் ஈனத்தனமும் கொண்டவர் என ராஜ்கிரன் கூறினார்.

நான் எப்போதுமே அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டேன் எனவும் ராஜ்கிரன் கூறியிருந்தார்.இந்நிலையில் ராஜ்கிரனின் கோபமான பதிவிற்கு பிறகு முனீஸ் ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் மனைவியின் ஆசை படி அவருக்கு தன்னுடைய கல்யாண பரிசாக ஒரு புதிய தொழிலை ஆரம்பித்து வைக்க நினைப்பதாகவும் அதன் திறப்பு விழா விரைவில் நடைபெறும் எனவும் வீடியோ வெளியிட்டு இருந்தார்.
https://youtu.be/xPiJmUUDOsg
அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வந்த நிலையில் ராஜ்கிரன் மற்றும் அவர்கள் இருவரையும் அழைத்து ஜீ தமிழில் திருமணம் செய்து வைத்துள்ளனர்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.