தமிழ் சினிமாவில் 90களில் சூப்பர் ஸ்டார் ரஜினி கொடி கட்டி பறந்தவர். 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய ஹிட் கொடுத்த நிலையில் அடுத்து வெளியான அண்ணாமலை திரைப்படமும் மாபெரும் வெற்றியை தேடி தந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெளியான பாட்ஷா திரைப்படம் வேற லெவலில் வெற்றியை கொடுத்தது.

படம் வெளியாவதற்கு முன்பே ரஜினியின் போஸ்டர்கள் வெளியாகி தீயாய் பரவின. அதில் இடம்பெற்ற டயலாக் மற்றும் ரஜினியின் ஸ்டைல் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சுரேஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் ரஜினி, நக்மா மற்றும் ரகுவரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பட்டி தொட்டி எல்லாம் இந்த படம் பரவலாக பேசப்பட்டது.

அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள பாட்ஷா திரைப்படம் இரண்டாவது பாகமும் வர வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்தனர். ஆனால் நாங்களே நினைத்தாலும் இனி பாட்ஷா மாதிரி ஒரு படம் பண்ண முடியாது என்று ரஜினி மற்றும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா கூறினர். இருந்தாலும் பாட்ஷா திரைப்படத்தின் ரீமேக் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில் பாட்ஷா படத்தின் ரீமேக் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக பிரபல காமெடி நடிகர் கருணாகரன் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.அதாவது பாட்ஷா படத்தின் ரீமேக் கண்டிப்பாக வரவேண்டும் என்றும் அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பதிலாக அஜித்குமார் நடிக்கணும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் அஜித் மட்டுமே பாட்ஷா கேரக்டருக்கு சரியாக இருப்பார் என்று அவர் கூறியுள்ளார். எனவே இந்த தகவல் அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
