சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் முதலாக வாங்கிய கார் இதுவா?…. செம மாஸாக ஓட்டி வரும் புகைப்படம் இதோ….!!!!

தமிழ் சினிமாவில் இன்றளவும் சூப்பர் ஸ்டார் என்று அறியப்படும் ரஜினிகாந்த் முன்னணி நடிகராக வலம் வருகிறார். பல படங்களில் வில்லனாகவும் பல படங்களில் ஹீரோவாகவும் அசத்தியிருப்பார். நடிப்பில் இவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது. கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக வலம் வருகிறார்.

இவரின் படங்கள் ஏதாவது திரையில் வெளியாகிறது என்றால் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.  அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர். இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அவருக்கு வயதானாலும் அவரின் நடிப்பிற்கு இன்னும் வயதாகவில்லை. அப்போது இருந்த அதே ஸ்டைலில் இன்றளவும் கலக்கி வருகிறார்.

இவர் அடுத்ததாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனிடையே ரஜினி குறித்து அவ்வப்போது அன்சீன் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றன.அவ்வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய முதல் காரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது ரஜினி முதலில் வாங்கிய கார் premier padmini அதன்  நம்பர் TMU 5004.