தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவர்தான் அனுஷ்கா. இவர் திரைத்துறையில் 16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் அனுஷ்கா செட்டி சமீபத்தில் தனது செல்லப் பிராணியான டூட்உடல் எடுத்த வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அது ஒரு அழகான நாய்க்குட்டி. சூட்டிங் இல்லாத சமயங்களில் அனுஷ்கா அந்த நாய்க்குட்டியுடன் தான் தனது பொழுதை கழிப்பார்.

ராஜமௌலியின் பாகுபலி வெளியான பிறகு அனுஷ்கா செட்டி பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அப்போதிலிருந்து தனது ரசிகர்களுக்காக சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அனுஷ்கா தனது திரை வாழ்வில் 17வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ள நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடிகர் நவீன் பொலி செட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார். இவர் தெலுங்கில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முன்னணி இடம் வகிக்கிறார்.தற்போது இவரும் அனுஷ்காவும் ஒரு படத்தில் நடித்து வருகின்றன.

இந்நிலையில் அனுஷ்காவின் 17 ஆண்டு திரை பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ள அவர் தனது சமூக வலைதள பக்கத்தில், அனுஷ்காவுக்கு ஒரு கேக் கொடுத்துள்ளேன். 17 வருடங்களாக எனது பெஸ்ட் கோ ஸ்டார் . எங்களது புதிய படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் முழுக்க முழுக்க கொண்டாட்டம் தான் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
Bribed @MsAnushkaShetty with cake . “Ee 17 years lo nene best co star anta :P”. Congrats on an awesome journey so far. Our shoot has been going on guys. And it’s mad fun ! Malli @UV_Creations router off chese lopala update ichesa 🙂 #Anushka48 #NaveenPolishetty3 #MaheshP pic.twitter.com/jV9INuIvUW
— Naveen Polishetty (@NaveenPolishety) July 20, 2022