தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக பலம் வந்தவர் விவேக். தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல் டைம் பேவரட் காமெடியனாக திகழ்ந்தவர் இவர். இவர் மாரடைப்பு காரணமாக கடந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் குணச்சித்திர நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தவர். இயற்கையை நேசித்த இயற்கையின் பாதுகாவலராக விளங்கியவர் நடிகர் விவேக். அவர் இந்த மண்ணை விட்டு சென்றாலும் மக்களின் மனதை விட்டு இன்னும் செல்லவில்லை.

இவர் இறுதியாக சங்கர் இயக்கத்தில் தயாரான இந்தியன் 2 திரைப்படத்தில் முதல்முறையாக உலகநாயகன் கமல்ஹாசன் உடன் இணைந்து பணியாற்றி வந்த நிலையில் படம் முடிவதற்கு முன்னரே அவர் உயிரிழந்து விட்டார். அவரின் மறைவுக்குப் பின்னர் சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்த அரண்மனை 3 திரைப்படம் வெளியாகிறது.

இதனைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு விவேக் நடித்திருந்த தீ லெஜண்ட் திரைப்படமும் வெளியாகிறது. அந்தத் திரைப்படத்தில் சரவணன் அருளுடன் இணைந்து விவேக் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் லெஜெண்ட் சரவணன் படப்பிடிப்பின் போது விவேக் அவர்களுடன் இறுதியாக எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது twitter பக்கத்தில் பகிர்ந்து மறக்க முடியாத நினைவுகள் என்று குறிப்பிட்டுள்ளார்.நடிகர் விவேக் இறப்பதற்கு முன்பே இறுதியாக எடுத்த புகைப்படம் என்பதால் அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.
Memorable Moments with PadmaShri @Actor_Vivek during #TheLegend Shoot#TheLegendRunningSuccessfully #WeMissYouVivekSir pic.twitter.com/3Ry8no86Q8
— Legend Saravanan (@yoursthelegend) August 12, 2022