தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் தனது அழகில் ரசிகர்களை சொக்க வைத்திருப்பார். புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் சாதனை படைத்தது. அதற்கு முக்கிய காரணம் ராஷ்மிகாவும் தான்.

அந்தப் படத்தில் தனது நடிப்பை அற்புதமாக அவர் வெளிப்படுத்தி இருப்பார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக இவர் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் வருகின்ற 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக பார்க்கப்படும் ராஷ்மிகா மந்தனா தன்னுடைய மூன்று ஆசைகளை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஒரு சரித்திர படம்,விளையாட்டு மையப்படுத்திய ஒரு படம் மற்றும் ஒரு வாழ்க்கை படத்தில் நடிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.