காதலியை கரம் பிடிக்கும் பிக்பாஸ் பிரபலம்…. மணப்பெண் யார் தெரியுமா?…. ஜோடியாக அவரே வெளியிட்ட புகைப்படம்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிரபல திரைப்பட விநியோகஸ்தர் கல்யாணியின் மகன்தான் ஹரிஷ் கல்யாண்.இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தில் நடிகை அமலாபாலும் நடித்திருந்தார்.

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அவ்வளவு அதிகமாக கிடைக்காத நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர் தொடர்ந்து பல படங்களில் நடிக்க தொடங்கினார்.நடிப்பில் தற்போது 100 கோடி வானவில் திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் அந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதனிடையே ஹரிஷ் கல்யாண் குறித்து பலவித காதல் கிசுகிசுக்கள் அவ்வபோதை இணையத்தில் வளம் வந்து கொண்டிருக்கும் நிலையில் முதன்முறையாக தனது காதலியுடன் ஜோடியாக கைகோர்த்து இருக்கும் அழகிய புகைப்படத்தை கரிஷ் கல்யாண் வெளியிட்டுள்ளார். இதன் மூலமாக முதன் முறையாக தனது காதலை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

அதோடு இவரின் திருமண அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் மணப்பெண் யார் என்பது திருமணத்தின் போது தான் தெரியவரும். இதை தொடர்ந்து ஹரிஷ் கல்யாணத்துக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.