பிரபல நடிகையுடன் கேக் வெட்டிய பிக்பாஸ் தர்ஷன்…. அதுவும் எந்த இடத்தில் தெரியுமா?…. வைரலாகும் புகைப்படம்…!!!!

மாடலிங் துறையில் இருந்து வந்தவர்தான் தர்ஷன். இலங்கையை பூர்விகமாகக் கொண்ட இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். நிகழ்ச்சியின் இறுதிவரை வந்த தர்ஷன் வெற்றி பெறுவார் என்று பார்வையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்த நிலையில் நூலிலையில் வெற்றி வாய்ப்பு பறிபோனது.

இருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு தர்ஷனுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் புரிந்தன. அதன்படி தாய்க்கு தாரம் என்ற மியூசிக் ஆல்பத்தில் தர்ஷன் நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை ஆயிஷா நடித்த தருண் குமார் இசையில் இந்த ஆல்பம் உருவானது. அதனைத் தொடர்ந்து சமீபத்தில் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கூகுள் குட்டப்பா திரைப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடித்த அவருக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்து அசத்தியிருந்தார்.

இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து ஏராளமான விளம்பர படங்களில் தர்ஷன் நடித்து வருகிறார். இதனிடையே லாஸ்ட்லியா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் Happiest Birthday tharsh என தர்ஷனுடன் படுக்கையறையில் கேட்குடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.