விஜய் டிவியில் நுழைந்த மன்சூர் அலிகான்…. நொந்து நூடுல்ஸான பிரியங்கா….. இணையத்தில் வைரலாகும் வேற லெவல் வீடியோ…..!!!!

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடிப்பில் உருவான கேப்டன் திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. வில்லனாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல்களிலும், காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் படம் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். அவ்வப்போது கருத்துள்ள மற்றும் சில வேடிக்கையான வீடியோக்களையும் இவர் இணையத்தில் பகிர்வது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில மாதமாக மன்சூர் அலிகான் பேட்டியில் மாஸ் செய்து வரும் நிலையில் தொகுப்பாளர் பிரியங்காவை மன்சூர் அலிகான் படாத பாடுபடுத்திய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.விஜய் டிவியில் தற்போது ராஜு வீட்ல பார்ட்டி  என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியை ராஜு தொகுத்து வழங்கி வருகிறார்.

அவருடன் இந்த நிகழ்ச்சியில் பிரியங்கா, மதுரை முத்து மற்றும் ராமர் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டு காமெடி செய்து வருகிறார்கள். இதனிடையே இந்நிகழ்ச்சியில் மன்சூர் அலிகான் கலந்து கொண்டிருந்தார்.அப்போது மன்சூர் அலிகான் பிரியங்கா உடன் சேர்ந்து நடனம் ஆடினார்.அது மட்டுமல்லாமல் ராமரும் மன்சூர் அலிகான் போலவே உடை அணிந்து அவரை கலாய்த்து தள்ளினார். அதற்கான ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.இதனைத் தொடர்ந்து இந்த எபிசோடை பார்க்க ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்.