விஜய் டிவியில் விரைவில் ஆரம்பமாகும் பிக் பாஸ் சீசன் 6- இல் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளன. டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். அவ்வளவு விறுவிறுப்பான நிகழ்ச்சி இது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் சர்ச்சையில் சிக்குவதை ரசிப்பதற்கு ஒரு பெரிய கூட்டம் உள்ளது என்றால் மறுபக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதை பார்ப்பதற்கு ஒரு பெரிய பட்டாளமும் உள்ளது. தற்போது வரை ஐந்து சீசன்கள் முடிந்துள்ள நிலையில் விரைவில் சீசன் ஆறு ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் விவரங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பாலிமர் நியூஸ் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், ரியாலிட்டி ஷோவில் 40 நாட்கள் கலந்து கொள்கிறேன் என கூறியுள்ளார். அவர் இவ்வாறு மறைமுகமாக பிக் பாஸ் ஷோவை குறிப்பிட்டு பேசியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Welcome to the reality club #NewsReaderRanjith
Missing ur voice in News nowadays & looking forward to see ur fun & Action side in reality????#PolimerRanjith pic.twitter.com/q6lT4aqNZR
— Imadh (@MSimath) July 30, 2022