“தலைவர் பேரன்னா சும்மாவா, சும்மா அதிருதில்ல”…. பெரியம்மா வேலை செய்யும் ஐஸ்வர்யா…. தங்கை மகனுடன் க்யூட் வீடியோ….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்துக்கு இரண்டு மகள்கள் உள்ளன.அதில் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுசு உடன் திருமணம் ஆகி கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு பிறகு சமீபத்தில் விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா கடந்த 2010 ஆம் ஆண்டு அஸ்வின் ராம்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் வித் கிருஷ்ணா என்ற மகன் அவர்களுக்கு உள்ளார்.

இதனிடையே அஸ்வினை பிறந்த சௌந்தர்யா விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு மறு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்த நிலையில் ரஜினியின் வீட்டில் தற்போது நான்கு பேரக் குழந்தைகள் துள்ளி விளையாடுகின்றன.இந்நிலையில் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி பகிர்வது வழக்கம்.

அவ்வகையில் தன்னுடைய தங்கை மகனான வித் கிருஷ்ணா உடன் விளையாடி மகிழ்ந்த வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் என் தங்கை மகன் எனக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறான், நான் இப்போது பெரியம்மா பணியில் இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Aishwaryaa Rajinikanth இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@aishwaryarajini)

அந்த வீடியோவில் இரண்டு கார்களை வைத்துக்கொண்டு ஐஸ்வர்யாவும் அவரின் தங்கை மகனும் விளையாடும் வீடியோ இடம்பெற்றுள்ளது. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் தலைவர் பேரன் என்றால் சும்மாவா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்