செஸ் ஒலிம்பியாட்…. காவலர்களை வீட்டிற்கு அழைத்து நெகிழ வைத்த ரஜினிகாந்த்…. என்ன செய்தார் தெரியுமா?….!!!

இந்தியாவில் முதல்முறையாக அதுவும் தமிழகத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரம் பூந்தேரி கிராமத்தில் உள்ள நட்சத்திர அரங்கில் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியா தொடருக்கான தொடக்க விழா நேற்று முன்தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

அந்த விழாவில் பிரதமர் மோடி,தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரை தொடங்கி வைத்தனர். கோலாகலமாக நடைபெற்ற அந்த தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா கலந்து கொண்டனர்.

இந்நிலையில் மாமல்லபுரத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் நிகழ்ச்சியில் தனது பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்துக் கொண்ட போலீசாரை நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு வரவழைத்து பாராட்டு தெரிவித்தார். அவ்வகையில் நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் மருது, காவலர்கள் ராஜ்குமார், தங்கப்பாண்டி உள்ளிட்ட காவல்துறையினரை வீட்டிற்கு அழைத்து நன்றி கூறி பாராட்டுகளை தெரிவித்தார் ரஜினிகாந்த். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.