முதல் நாளிலேயே இத்தனை கோடியா?….. வசூல் வேட்டையில் “தி லெஜண்ட்”….. மாஸ் அப்டேட்…..!!!!

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி சரவணன் நடிப்பில் உருவான தி லெஜன்ட் திரைப்படம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் 2500 திரையரங்குகளில் வெளியானது.உலகம் முழுவதும் ஐந்து மொழிகளில் வெளியானது.  இரட்டை இயக்குநர்களான ஜேடி ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

நேற்று முன்தினம் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்துள்ளன. ஜாலியாக நண்பர்களுடன் படத்தை பார்த்து சிரித்து மகிழலாம் என சோஷியல் மீடியாவிலும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர். இந்நிலையில் இந்த திரைப்படம் முதல் நாளில் இரண்டு கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் இந்த படத்திற்கு மேலும் கூடுதலாக வசூல் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலுக்கு மட்டும் 30 கோடி செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பட்ஜெட் 150 கோடியை தாண்டி உள்ளது.