குக் வித் கோமாளி சுனிதாவிற்கு இவ்வளவு அழகான தங்கையா?…. ஹீரோயினிகளுக்கு டப் கொடுப்பாங்க போலயே…..!!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை சுனிதா. இவர் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார். வடமாநிலத்தை சேர்ந்த இவர் குழந்தை போல கொஞ்சும் தமிழில் பேசுவது ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வைரல் தான்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த மூன்று சீசன்களாக கோமாளியாக நடித்து வருகிறார். அதில் இவர் தமிழில் சொதப்புவது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிடிக்கும். இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூறலாம். இவர் தனுஷ் நடிப்பில் வெளியான 3 திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் தோழியாக நடித்திருப்பார். இவர் எப்போதுமே சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார்.

இந்நிலையில் இவருக்கு ஒரு தங்கை உள்ளார். அவரின் பெயர் நந்திதா. சென்னையில் இருக்கும் சுனிதா உடன் அவரின் தங்கையும் இருக்கின்றார். சுனிதாவும் அவரின் தங்கை நந்திதாவும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் சுனிதாவின் தங்கை ஹீரோயினி போல் இருக்கிறார்களே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.