OMG: போதைக்கு அடிமையான பிரபல நடிகை…. இன்ஸ்டாவில் வெளியான வீடியோவை பார்த்து….. ஷாக்கான ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர்களுள் ஒருவர் தான் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் முதல் முதலாக 2018 ஆம் ஆண்டு கீர்த்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் வெளியான காளி என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

அவ்வகையில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வந்த இவர் தற்போது நலித்து வரும் திரைப்படம் வெப். இந்த படத்தில் நட்பின் நடராஜ் நாயகனாக நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் களமிறங்கியுள்ளார்.

இந்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். அப்ப படத்தில் போதைக்கு அடிமையான ஒரு பெண்ணாக ஷில்பா மஞ்சுநாத் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அப்படத்தின் ஸ்னிக் பீக்கில் போதைப் பொருட்களை உட்கொள்வது போலவும், சிகரெட் பிடிப்பது போலவும் நடித்துள்ளார்.

அந்த காட்சியை இன்ஸ்டால் பதிவிட்டுள்ள இவர், இதில் ஒவ்வொரு காட்சியையும் நான் என்ஜாய் பண்ணி நடித்துள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்த வீடியோ போதைப் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாகவும் இது போன்ற காட்சிகளில் நடிக்க வேண்டாம் எனவும் அவருக்கு வேண்டுகோள் விடுத்து வருகிறார்கள். மேலும் அந்த வீடியோ தற்போது இணையத்தில் பரவி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Shilpa Manjunath இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@shilpamanjunathofficial)