லண்டனில் 1540 கிலோமீட்டர்….. வேற லெவலில் ஆர்யா படைத்த சாதனை…. குவியும் பாராட்டு….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஆர்யா. அவர் இறுதியாக நடித்த திரைப்படம் டெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தத் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக நடிகர் ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணியில் கேப்டன் திரைப்படம் உருவாகியுள்ளது.

நடிகர் ஆர்யா  நடிப்பு மட்டுமல்லாமல் உடற்பயிற்சி மற்றும் சைக்கிளிங் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இவர் எப்போதும் சைக்கிளிங் செய்து கொண்டிருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்வது வழக்கம். இவர் வர் ராண்டன்னியூரிங் என்ற நீண்ட தூர சைக்கிள் ஓடுதல் விளையாட்டிலும் ஈடுபட்டு வருகின்றார்.

இந்நிலையில் லண்டனில் நடைபெற்ற சைக்கிளின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்யா 1540 கிலோமீட்டர் தூரத்தை கடந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் அதில் இந்திய தேசியக் கொடியை பெருமையாக அசைத்தவாறு ஆர்யா காணப்படுகிறார்.

மேலும் தனது குழுவுடன் சைக்கிளிங் போட்டியில் வெற்றி பெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் ஆர்யா குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.