தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் ரத்தினகுமார். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்தினகுமார் ஒன்றாக இணைந்துள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் மற்றும் விக்கிரமாகிய திரைப்படங்கள் பெரிய ஹிட் கொடுத்தன. இந்த திரைப்படங்களுக்கு வசனகர்த்தாவாக இரத்னகுமார் பணியாற்றியுள்ளார். மேலும் சந்தானத்துடன் இணைந்து குழு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் ரத்தினகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது தற்போது தளபதி 67 படத்தில் லோகேஷ் கனகராஜ் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியான நிலையில் தற்போது அவருடன் இணைந்து தளபதி 67 படத்தின் பணிகளில் இவர் ஈடுபட்டு வருவதை சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுவதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்த நிலையில் தற்போது அவரும் இயக்குனர் ரத்தினகுமாரும் விஜய் படத்திற்காக கதை விவாதத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் தொடங்கும் என படக்குழு தெரிவித்த நிலையில் இப்படத்தை ஏழு ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க உள்ளதாகவும் படத்தில் நடிகர் விஜய் கேங்ஸ்டாராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் கௌதம் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் அவரை தவிர மேலும் மூன்று வில்லன்கள் இப்படத்தில் இடம்பெற உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் தீயாய் பரவி வருகிறது. தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் ரத்தினகுமார் ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.