அடடே…. நம்ப விருமன் பட கார்த்தியா இது?…. அடுத்த படத்தில் இப்படி ஒரு கெட்டப்பா?…. இணையத்தில் லீக்கான NEW போஸ்டர்….!!!!

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக பலம் வருபவர் நடிகர் கார்த்தி. தமிழ் சினிமாவில் இன்றுவரை பிரபலமான நடிகராக திகழும் நடிகர் சிவகுமாரின் மகன்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி. தனது தந்தையைப் போலவே இவர்கள் இருவரும் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகின்றன.

இளைய மகனான நடிகர் கார்த்தி கடந்த 2011 ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட இந்த திருமணம் உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் திரைத்துறையிலும் அசத்தி வருகிறார்.

தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வரும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் விருமன். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியிலும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து இவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் உள்ளிட்ட திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இந்நிலையில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குனர் p.s. மித்ரன் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. வயதான தோற்றம் மற்றும் போலீஸ் கதாபாத்திரத்தில் கார்த்தி இருக்கும் அந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள்.