“எங்களின் அன்பான Jilluma”….. உங்களின் மிகப்பெரிய ரசிகை நான்…. சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு….!!!!

தமிழ் சினிமாவில் இன்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் என்றால் அவர் ரஜினி தான்.சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் இவர் நடித்துள்ள பெரும்பாலான படங்கள் ஹிட் கொடுத்துள்ளனர். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர்.

இவரின் நடிப்பில் அண்மையில் வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அவருக்கு வயதானாலும் அவரின் நடிப்பிற்கு இன்னும் வயதாகவில்லை. அப்போது இருந்த அதே ஸ்டைலில் இன்றளவும் கலக்கி வருகிறார்.

தற்போது இயக்குனர் நெல்சன் திலிக்குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த திரைப்படத்தில் ரஜினியுடன் தமன்னா மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் நாட்டின் 75வது சுதந்திர தினம் மட்டுமின்றி ரஜினி தனது 47 வருட திரையுலக பயணத்தை கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்களை அவரின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இணையத்தில் பகிர்ந்தார்.

இந்நிலையில் தற்போது அவரின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது அப்பா மற்றும் அம்மாவுடன் நேற்றைய கொண்டாட்டத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். அந்த புகைப்படத்தில், “எங்களின் அன்பான jilluma, அப்பாவின் மிகப் பெரிய ரசிகை மற்றும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார்”என்று பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.