தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இறுதியாக நடித்த மாறன் திரைப்படத்திற்கு பிறகு திருச்சிற்றம்பலம், நானே வருவேன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட பல படங்களில் நடிப்பதற்கு தனுஷ் கமிட் ஆகி உள்ளார். அதன்படி ஹாலிவுட் இயக்குனர் ரூஸ்சோ பிரதர்ஸ் இயக்கிய தி கிரே மேன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.படத்தில் சிறிது நேரமே தோன்றினாலும் அவரது கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த 20 வருடங்களாக தனது கடின உழைப்பால் ஆக சிறந்த நடிகராக உயர்ந்திருக்கும் தனுஷ் பாடகர், பாடலாசிரியர்,இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் தன்மை கொண்ட கலைஞராக தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவில் நுழைந்தவர்கள் பட்டியலில் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஆஜீத் இணைந்துள்ளார். அதன்படி தனுஷ் மற்றும் செல்வராகவனின் வெற்றி கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள “நானே வருவேன்” என்ற திரைப்படத்தில் தான் ஆஜித் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். இதனை அவர் செல்வராகவனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு ஆஜித் உறுதி செய்துள்ளார். இதையடுத்து பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
