“தளபதி 67″….. 15 ஆண்டுகளுக்கு பின் விஜயுடன் இணையும் பிரபல நடிகை…. உச்சகட்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள்…..!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய். இவரின் நடிப்பில் அடுத்ததாக வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

அதனைப்போலவே தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை திரிஷா. இன்றளவும் நடிப்பிலும் சரி அழகிலும் சரி லட்சக்கணக்கான ரசிகர்களை கொள்ளை அடிப்பவர்.  தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.

இப்படிப்பட்ட இவர்கள் இருவரின் நடிப்பிலும், தரணி இயக்கத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கில்லி. இந்த படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பார். இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு தளபதி 67 திரைப்படத்தில் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கில்லி, திருப்பாச்சி, ஆதி மற்றும் குருவி என இதுவரை நான்கு படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இந்த ஜோடி மீண்டும் இணைவது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.