தளபதி விஜய் NO சொல்லி தனுஷ் நடித்த ஹிட் திரைப்படம்…. அது என்ன படம்னு நீங்களே பாருங்க…..!!!!

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டு வளம் வருபவர் நடிகர் விஜய். இவரது திரைப்படங்கள் எதாவது வெளியாக்கினால் அதனை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடுவார்கள். தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. தமன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வருகிறது.

இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். திரைப்படத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. குறிப்பாக நடிகர் விஜய் தனக்கென ஒரு திரைப்படத்தின் கதையை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருவதால் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பு பெறுவது வழக்கம்.

இதனிடையே கேவி ஆனந்த் இயக்கிய அனேகன் திரைப்படத்தில் தனுஷ், கார்த்திக் மற்றும் அமரா தஸ்துரின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் இந்த திரைப்படத்தில் உண்மையில் முதலில் விஜய் தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் படத்தின் கதையை சொன்ன போது விஜய் படத்தை இப்போதைக்கு நடிக்கவில்லை என்று நிராகரித்து விட்டார். அதன் பிறகு தனுஷ் இந்த படத்தின் கதையை கேட்டு ஓகே சொல்லி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.