நயன்தாராவுக்காக இப்படி இறங்கீட்டாரே?…. விக்னேஷ் சிவன் செய்த செயல்…. இன்ஸ்டாவில் போட்ட போஸ்ட்….!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மட்டுமல்லாமல் இளைஞர்களின் கனவு கண்ணியாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் கடந்து ஜூன் மாதம் திருமணம் நடந்து முடிந்தது.

அவர்களின் திருமணத்தில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்த கையோடு தாய்லாந்திற்கு ஹனிமூன் சென்ற இவர்கள் பிறகு சென்னை திரும்பினர். இதனிடையே கடந்த மாதம் இரண்டாவது ஹனிமூனுக்காக பார்சிலாந்து சென்ற அவர்கள் அங்கு ரொமான்டிக் மூடில் எடுத்துக் கொண்ட பல புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர்.

தற்போது வரை பல புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் ரசிகர்கள் அதனை அதிக அளவு ஷேர் செய்து வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாராவை வைத்து விக்னேஷ் சிவன் ஒரு டிவி விளம்பரத்தை இயக்கியுள்ளார்.ஒரு பிரபல பிராண்டின் விளம்பரத்தில் நயன்தாரா நடித்த நிலையில் அதனை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.

அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் இதுதான் என் முதல் டிவி விளம்பரம் எனவும் தெரிவித்துள்ளார். ஒரு பக்கம் அஜித் திரைப்படத்தை இயக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வர மறுபக்கம் மனைவி நயன்தாராவுக்காக விக்னேஷ் சிவன் டிவி விளம்பரத்தை கூட இயக்கும் அளவிற்கு சென்று விட்டாரே என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.