இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவு…. சூர்யா – ஜோதிகா வீட்டில் விசேஷம்…. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக வளம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா. காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோடிகளில் மிகவும் பிரபலமானவர்கள் இவர்கள். திருமணத்திற்கு முன்பு உயிரில் கலந்தது,சில்லுனு ஒரு காதல் மற்றும் பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் ஒன்றாக இணைந்து நடித்த இவர்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் ஒரு சில படங்களில் இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதனிடையே சூர்யா தனது மனைவியுடன் இணைந்து 2d என்கிற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில் இன்றுடன் தங்களுடைய 16ஆவது திருமண வாழ்க்கையை நிறைவு செய்து 17 வது ஆண்டில் சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடி காலடி எடுத்து வைக்கின்றனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.